கிராம கோயில் பூசாரிகளுக்கு பயிற்சி முகாம்

 

கன்னியாகுமரி, மே 29: குமரி மவட்ட கிராம கோயில் பூசாரிகள் பேரவையின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் மற்றும் கூட்டம் குமரி பகவதியம்மன் கோயில் அருகே உள்ள இந்து யாத்ரா நிவாஸ் வேத பாடசாலையில் நடந்தது. இதில் விசுவ இந்து வித்யா கேந்திரா பொதுச்செயலாளர் டாக்டர் கிரிஜா சேஷாத்திரி, இந்து கோயில்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் வேலுமயில், கன்னியாகுமரி மண்டல அமைப்பாளர் ரெங்கநாதன், விசுவ இந்து பரிஷத் பொறுப்பாளர் ராமசுவாமி, நாகர்கோவில் கிராம கோயில் பூசாரிகள் பேரவை பொறுப்பாளர் சர்மா, குட்டி, உள்பட 100க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சென்னையில் குடிநீர் விநியோக அளவு மற்றும் தரத்தை மேம்படுத்த நாளை முதல் கணக்கெடுப்பு பணி: குடிநீர் வாரியம் தகவல்

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்