கிராம உதவியாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

மதுரை, அக்.20: தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்க தெற்கு வட்டக்கிளை பொதுக்குழு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு வழங்கிய மாற்றுத்திறனாளி ஊர்தி பயணப்படி மற்றும் கருணை அடிப்படையிலான பணி நியமனம் ஆகியவற்றை நிறுத்தி வைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் அக்.31ல் நடக்கும் காத்திருப்பு போராட்டத்திற்கு மதுரை மாவட்டத்தில் இருந்து பெரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் மதுரை மாவட்ட தெற்கு வட்டத்தின் புதிய தலைவராக அழகர்சாமி, துணை தலைவர்களாக சுந்தரி, தென்னரசு, செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், துணை செயலாளர்கள் பிரசாந்த், முத்துமணி, பொருளாளர் அசோக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், செல்லப்பாண்டி, சந்திரலேகா, தணிக்கையாளர் ஆஷாசெரின் ஆகியோரும் தேர்வாயினர். தேர்வு செய்யப்பட்டனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்