கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

குடியாத்தம், ஜூலை 2: வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதி அருகிலுள்ள தனகொண்டபள்ளி, சைனகுண்டா, மோர்தானா, வீரிசெட்டிபள்ளி, பரதராமி, கொட்ட மிட்டா, மோர்தனா, விடி பாளையம், கதிர்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதம் செய்து வருகிறது. இதனை விரட்டும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமத்தில் ஒற்றை காட்டு யானை பிளிறியபடி விவசாய நிலத்திற்குள் நுழைந்தது. இதுகுறித்து தகவலறிந்த வன ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. யானைகளை நிரந்தரமாக விரட்டி அடிக்க குடியாத்தம் பகுதிக்கு கும்கி யானையை கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்