கிராமத்திற்குள் யானை நுழைவதை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் அரவிந்த் லிம்பாவளி உறுதி

தீர்த்தஹள்ளி தொகுதி எல்எல்ஏ அரக ஞானேந்திரா எழுப்பிய கேள்விக்கு வனத்துறை அமைச்சர் அரவிந்த் லிம்பாவளி பதில் அளித்து கூறியதாவது: “தீர்த்தஹள்ளி தாலுகா ஆகும்பே பகுதியில் வனப்பகுதியில் இருந்து யானைகள் கிராமத்திற்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதையொட்டி 5.722 கிமீ. நீளம் யானை தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது. அத்துடன் யானை நுழைவதை தடுக்கும் வகையில் சிறப்பு படை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அது போல் குரங்குகளின் தாக்குதல்களை தடுப்பதற்காக ஷிவமொக்கா மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் குரங்குகள் மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்படும். இந்த திட்டத்திற்காக 2020-21ல் 25 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. குரங்குகளை பிடிப்பதற்கான கூண்டுகள், சிகிச்சை அளிப்பதற்கு 12 கால்நடை மருத்துவ அதிகாரிகள் நியமனம், குரங்குகளுக்கு இனவிருத்தி தடை ஆபரேசன் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளோம். வன விலங்குகளால் ஏற்படும் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. தீர்த்தஹள்ளி மட்டும் இன்றி மாநிலத்தின் மற்ற பகுதிகளில் வன விலங்குகள் மூலமாக ஏற்படும் சேதத்தை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்….

Related posts

நீட் முதுநிலை தேர்வு ஆகஸ்ட்.11-ம் தேதி நடைபெறும்: தேசிய தேர்வு வாரியம்

கிருஷ்ணா மாவட்டத்தில் நள்ளிரவு சுரங்கத்துறை முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் தீ வைத்து எரிப்பு

இந்தியாவுக்கு பெருமை சேருங்கள்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்