கிராமத்திற்குள் நுழைய முயன்ற 3 காட்டு யானைகள் வனத்துறையினர் விரட்டினர் குடியாத்தம் அருகே

குடியாத்தம், மார்ச் 5: குடியாத்தம் அருகே கிராமத்திற்குள் நுழைய முயன்ற 3 காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். குடியாத்தம் வனப்பகுதி அருகிலுள்ள குடியாத்தம் அடுத்த தனகொண்டபள்ளி, சைனாகுண்டா, வீரிசெட்டிபள்ளி, பரதராமி, கொட்டமிட்டா, மோர்தனா, விடி பாளையம் மற்றும் கதிர்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்குள்ள பயிர்களை சேதம் செய்து வருகின்றது. இதனை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை குடியாத்தம் அடுத்த கதிர்குளம் கிராமத்தில் 3 காட்டு யானை பயங்கரம் பிளிறல் சத்தத்துடன் விவசாய நிலத்திற்குள் நுழைய முயற்சி செய்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் இதுகுறித்து குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து