கிராமத்திற்குள் நுழைய முயன்ற ஒற்றை யானை குடியாத்தம் அருகே 3வது நாளாக

குடியாத்தம், டிச.28: குடியாத்தம் அருகே 3வது நாளாக கிராமத்திற்குள் நுழைய முயன்ற ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. குடியாத்தம் வனப்பகுதி அருகில் உள்ள தனகொண்டபள்ளி, சைனகுண்டா, வீரிசெட்டிபள்ளி, பரதராமி, கொட்டமிட்டா, மோர்தனா, வி.டி.பாளையம், கதிர்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இரவு நேரத்தில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதம் செய்து வருகின்றன. அந்த யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை குடியாத்தம் அடுத்த டி.பி.பாளையம் கிராமத்தில் ஒற்றை காட்டு யானை பயங்கர பிளறும் சத்தத்துடன் விவசாய நிலத்திற்குள் நுழைய முயற்சித்தது. இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பட்டாசுகள் வெடித்து மேளம் அடித்து யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர். இந்த ஒற்றை யானை குடியாத்தம், பேரணாம்பட்டு வனப்பகுதி அருகில் உள்ள கிராமம் மற்றும் விவசாய நிலங்கள் நுழைய 3வது நாளாக நேற்று முயற்சித்தது குறிப்பிடத்தக்கது. யானைகளை நிரந்தரமாக விரட்டி அடிக்க குடியாத்தம் வனத்துறைக்கு கும்கி யானையை வரவழைக்க வேண்டும் என்பது விவசாய மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி