கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

தேன்கனிக்கோட்டை, ஜூன் 22: கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறை உதவி புவியியலாளர் கோகுலகண்ணன், கனிமவள தனித்துணை தாசில்தார் மற்றும் வருவாய்த் துறையினர் கொண்ட குழுவினர், நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சந்தனப்பள்ளி தரப்பு திருமலை நகரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 2 கருப்பு கிரானைட் கற்களுடன் சென்ற லாரியை சோதனை செய்ததில், அனுமதி சீட்டு இன்றி கிரானைட் கற்கள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லாரியுடன் கற்களை பறிமுதல் செய்த கனிம வளத்துறை அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு