கிணற்றில் விழுந்த பெண் காப்பாற்ற சென்ற கரும்பு வெட்டும் மேஸ்திரி உயிரிழப்பு

விழுப்புரம், ஜூலை 31: விழுப்புரம் அருகே கிணற்றில் விழுந்த பெண்ணை காப்பாற்ற சென்ற கரும்பு வெட்டும் மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே வி.அகரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சத்தியராஜ் (34), கரும்பு வெட்டும் மேஸ்திரி. இவருக்கு கீதா என்பவருடன் திருமணம் நடந்து ஜீவிதா (8), தீபிகா (4), ருத்தராகவன் (6) என 3 பிள்ளைகள் இருக்கின்றனர். இதனிடையே நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாணியம்பாளையம் என்ற இத்தில் சென்ற போது மோகன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில் அதே பகுதியை சேர்ந்த ராணி (48) என்பவர் தவறி விழுந்துள்ளார். அந்த வழியாக சென்ற சத்தியராஜ் சத்தம் கேட்டு தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

அப்போது 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த பெண் காப்பாற்றுமாறு கூச்சலிடவே அவரை காப்பாற்ற சென்ற சத்தியராஜூம் கிணற்றில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உடனே விழுப்புரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் போராடி அவர்களை மீட்டனர். உயிரிழந்த சத்தியராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து ராணியும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சத்தியராஜின் தந்தை ஏகாம்பரம் அளித்த புகாரின் பேரில் வளவனூர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி