கிணற்றில் விழுந்த எறும்பு திண்ணி மீட்பு

மைசூரு: கிணற்றில் விழுந்த எறும்புதிண்ணியை உயிருடன் மீட்ட கிராமத்தினர் அதை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மைசூரு மாவட்டம் ஹூனசூரு தாலுகா சிக்காடிகனஹள்ளி கிராமத்தில் உணவு தேடி வந்த எறும்பு திண்ணி அங்கிருந்த பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்தது. இதை பார்த்த கிராம மக்கள் கயிறு கட்டி உடனடியாக எறும்பு திண்ணியை கிணற்றிலிருந்து உயிருடன் மீட்டனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து கிராமத்திற்கு வந்த வனத்துறை ஆர்எப்ஓ சந்தீப் தலைமையிலான வனத்துறையினரிடம் கிராமத்தினர் எறும்பு திண்ணியை ஒப்படைத்தனர். இதையடுத்து மீட்கப்பட்ட எறும்பு திண்ணி மண்டியா மாவட்டம் மேல்கோட்டை வனப்பகுதியில் விடப்பட்டது….

Related posts

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு