கிணற்றில் விழுந்து வாலிபர் பலி

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் வள்ளலார் நகர் பாரதமாதா தெருவை சேர்ந்தவர் அன்பு (38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோமதி (35). இவர்களுக்கு 12 மற்றும் 10 வயதில் மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் அன்பு, தனது திருமண நாளை கொண்டாடினார். இதையொட்டி காலையில் இருந்தே மது அருந்தி போதையில் இருந்தார். மாலை அவர், தைலாவரம் சாலையோரத்தில் தனது பைக்கை நிறுத்தி விட்டு, அருகில் உள்ள கிணற்றுக்கு சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தார். அன்பு வீடு திரும்பாததால், குடும்பத்தினர் தைலாவரத்தில், உள்ள விவசாய கிணற்றில் சென்று பார்த்தனர். அங்கு அன்பு சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். புகாரின்படி கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

Related posts

துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் ரோப் கார் நிலையத்தில் பக்தர்கள் அலைமோதல்

வேட்டவலம் அடுத்த தளவாய்குளம் வாரச்சந்தையில் ₹80 லட்சத்திற்கு வர்த்தகம்