கிட்டாம்பாளையம் ஊராட்சியில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம்

 

சோமனூர், ஜூலை 19: கிட்டாம்பாளையம் ஊராட்சியில் முதல்வரின் சிறப்பு திட்டமான உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அதிகாரியாக கோவை வடக்கு டாஸ்மாக் மேலாளர் துணை ஆட்சியர் ராணி லட்சுமி ஜெகதாம்பாள் பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். தொடர்ந்து ஊராட்சியில் உள்ள கிட்டாம்பாளையம் குளத்துப்பாளையம், வடுகபாளையம், வினோபாநகர் ஆகிய நான்கு பள்ளிகளிலும் ஆய்வு செய்து பள்ளிக் குழந்தைகளின் வருகையை சரிபார்த்தார்.

பள்ளியில் இடைநின்ற குழந்தைகள் பற்றி ஆய்வு செய்தார். குழந்தைகளின் கல்வித்தரத்தை பரிசோதித்தார். சத்துணவு மையம், அங்கன்வாடி மையம், நியாய விலைக்கடை உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். மொத்தம் 96 மனுக்கள் பெறப்பட்டது. ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் விஎம்சி சந்திரசேகர், ஊராட்சி மன்ற துணை தலைவர் சுப்புலட்சுமி, வார்டு உறுப்பினர்கள், பாலசுப்பிரமணியம், நாகேஸ்வரன், ஊராட்சி செயலாளர் மார்குட்டி, புருஷோத்தமன், நவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி