கிடாரங்கொண்டானில் கலெக்டர் மகாபாரதி ஆய்வு கொள்ளிடம் அருகே கொன்றைபுரீஸ்வரர் கோயிலில் பிரதோஷம்

கொள்ளிடம் ஜூன் 20: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சீயாளம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த கொன்றைபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு நேற்று பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் கொன்றைபுரீஸ்வரர் மற்றும் மங்கலநாயகிக்கு பால்,தயிர்,தேன், பன்னீர் மற்றும் திரவியப் பொடிகளைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் ராஜேந்திரன் மற்றும் சிவனடியார்கள் சார்பில் செய்திருந்தனர். இதேபோல் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ ஸ்வாமி,குன்னம் பூமிஸ்வரர், மாதிரிவேளூர், மாதலீஸ்வரர், திருமயிலாடி சுந்தரேஸ்வரர், மகேந்திரப்பள்ளி திருமேனி அழகர் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்