காஸ் விலை தொடர்ந்து உயர்வு விறகு அடுப்பில் சமைக்கும் நிலைக்கு தள்ளுகிறது அரசு: காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: நாடு முழுவதும் சமையல் காஸ் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் காஸ் சிலிண்டர் ரூ.875 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநதே, காலி சிலிண்டருடன் பங்கேற்று கூறியதாவது: காஸ் விலை உயர்வு, பெண்களுக்கு எதிரானது, மக்களுக்கு எதிரானது. இதன் மூலம் ஏழை மக்களை மீண்டும் வறட்டி, விறகு அடுப்பில் சமைக்கும் நிலைக்கு அரசு தள்ளுகிறது. காஸ் விலையை நிர்ணயிக்கும் சவுதி அராம்கோ நிறுவனம் சிலிண்டருக்கு நிர்ணயித்துள்ள நிஜமான விலை ரூ.600 மட்டுமே. நாம் ரூ.275 அதிகமாக தருகிறோம். கடந்த 9 மாதங்களில் ரூ.265 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டருக்கு அரசு மானியமும் தருவதில்லை. சந்தை விலைக்கும், மானிய விலைக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை.  இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

சொல்லிட்டாங்க…

சிறையில் உள்ள கவிதாவை விடுவிக்க நிர்பந்தம்? பிஆர்எஸ் கட்சியை பாஜகவில் இணைக்க திட்டம்: டெல்லியில் பேச்சுவார்த்தை

விக்கிரவாண்டி தொகுதியில் சாதனை வெற்றி பெற்ற அன்னியூர் சிவா முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து: அமைச்சர்களும் நன்றி தெரிவித்தனர்