காஸ் விலை உயர்வை கண்டித்து சிஐடியூவினர் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: காஸ் விலை உயர்வை கண்டித்து சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள இந்தியன் ஆயில் எரிவாயு நிரப்பும் ஆலை முன்பாக சிஐடியு சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அண்மையில்  காஸ்  விலையை  ரூ 25 உயர்த்தியதற்கு ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்கள் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்திவரும் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு  ஆதரவாக  மத்திய அரசு விலையை உயர்த்தி மக்களை வாட்டுவதாக குற்றம் சாட்டினர். இந்த ஆண்டில் மட்டும்  ரூ. 165 உயர்த்தி மக்களை வாட்டி வருவதாக குற்றம் சாட்டினர்.  உடனடியாக மத்திய அரசு சமையல் காஸ் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.    …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்