காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவதாக உள்ளது: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்துவதே காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் நோக்கமாக உள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் கட்டுக்கதைகளைப் பரப்புகிற நோக்கம் கொண்டது என்பதற்கு வரலாற்று ரீதியாக நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. காஷ்மீரி பண்டிட்டுகளும், முஸ்லீம்களும் சகோதரத்துடன் தான் வாழ்ந்து வந்தார்கள். இத்தகைய நல்லிணக்கம் ஜக்மோகனின் அடக்குமுறையில் வளர்ந்த தீவிரவாதத்தினால் உருவான கலவரங்கள் தான் பண்டிட்கள் பெருமளவு வெளியேறக் காரணமாக இருந்தது. பண்டிட்கள் வெளியேற்றத்தின் மூலம் துவேஷத்தை வளர்த்து, மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்துவதே காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் நோக்கமாகும்.மத துவேஷத்தை வளர்க்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை தயாரித்த இயக்குநரை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாராட்டி ஊக்கப்படுத்துவது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட மதச்சார்பற்ற கொள்கையை குழிதோண்டி புதைக்கிற செயலாகும். இதன்மூலம் மக்களை பிளவுபடுத்துகிற அரசியலை வளர்ப்பதன் மூலம் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பா.ஜ அரசை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை