காஷ்மீர் சுரங்க விபத்து பலி 10 ஆக உயர்ந்தது

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் சுரங்க விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டம் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் கோனி நாலா என்ற இடத்தில் சுரங்கபாதை கட்டப்பட்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை இரவு சுரங்க பாதையின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. நேற்று முன்தினம் ஒரு உடல் மீட்கப்பட்டது. 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். 9 தொழிலாளர்களை காணவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில், தொழிலாளர்களை மீட்கும் பணி நேற்று காலை மீண்டும் தொடங்கியதும் அப்போது 3 உடல்கள் மீட்கப்பட்டன. மாலையில் மேலும் 6 உடல்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது….

Related posts

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்