காஷ்மீரில் பதுங்கு குழிகள் உள்ளதா? சர்வதேச எல்லையில் சிறப்பு குழு சோதனை

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரின் அர்னியாவில், சர்வதேச எல்லைப்பகுதியில் செவ்வாயன்று பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற ஒருவரை எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். மேலும் மற்றொருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சர்வதேச எல்லைப் பகுதியில் ஒன்றிய ரிசர்வ் படை சார்பில் நேற்று சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஊடுருவல் முயற்சிகளை தடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு குழுவினரை கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டது. சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லைப்பகுதியிலும், எல்லையோர கிராமங்களிலும் சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. டிரோன்கள் மூலமாக சந்தேகத்திற்குரிய ஆயுதங்கள் வீசப்பட்டுள்ளதா, பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளதா என தீவிர சோதனை நடத்தப்பட்டது. …

Related posts

10 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

நீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு மூலம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: பிரதமர் மோடி, ஒன்றிய கல்வி அமைச்சருக்கு காங்கிரஸ் கண்டனம்

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம்