காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை!: ஒகேனக்கல் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்..சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை..!!

தருமபுரி: நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருக்கிறது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஒரே இரவில் ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 7,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், படிப்படியாக அதிகரித்து தற்போது பிலிகுண்டுலுக்கு வழியாக வினாடிக்கு 16,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரித்திருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருக்கிறது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,410 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து உயர்ந்திருக்கிறது. தொடர்ந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. …

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

வெள்ளக்காடாக மாறிய குடியிருப்புகள் ; பந்தலூரில் ஒரே நாளில் 27.8 செ.மீ மழை: சாலைகள் துண்டிப்பு, மண் சரிவு; முகாமில் மக்கள்

சாத்தூர் அருகே பயங்கர விபத்து; பட்டாசு ஆலை வெடித்து 4 பேர் பலி: குடும்பத்தினருக்கு தலா ரூ3 லட்சம் முதல்வர் நிதியுதவி