காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு சாலையில் ஓடி வீணாகும் குடிநீர்

கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பொன்நகர் அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்டக்குழாய் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெள்ளம்போல சாலையில் கலந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு காவிரி ஆற்றுப்பகுதியில் இருந்து நீரேற்று நிலையம் முலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிப்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளுக்கும், பொன் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று மூலம் குடிநீர் உறிஞ்சப்பட்டு குழாய் மூலம் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று காலை ராயனூர் பொன்நகர் பகுதியில் இருந்து கோடங்கிப்பட்டி செல்லும் சாலையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. போதிய மழையின்மை காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்நிலையில், அதிகளவு தண்ணீர் குழாய் உடைப்பு காரணமாக வெளியேறிச் சென்றதை அனைவரும் விரக்தியுடன் பார்த்துச்சென்றனர். ஆயிரக்கணக்கான லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் 2 மணி நேரத்துக்கும் மேலாக சாலையில் குடிநீர் வீணாவதாக மாநகராட்சிக்கு தகவல் கொடுத்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு