காவிரியில் தொடரும் வெள்ளம் மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கனஅடி நீர்திறப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1.25 லட்சம் கனஅடி நீர்திறக்கப்படுவதால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை 80 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இரவு 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலையும் அதே அளவு நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் 1,25,000 கன அடியாக உள்ளது. நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 23,000 கனஅடி நீரும், உபரிநீர் போக்கி வழியாக 1,02,000 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  இதனால், காவிரியில் வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது. காவிரி பாயும் 12 டெல்டா மாவட்ட கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்….

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு