காவிரிநீரை பெற்றுதரக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை

தஞ்சாவூர், ஜூலை 3: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக வழக்கம்போல் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிடவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் வறட்சியாக உள்ளது.

தமிழக அரசும் எப்போது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை. கர்நாடக அரசிடம் இருந்து விகித அடிப்படையில் தண்ணீர் கேட்டு பெறவில்லை என்று கூறுவதை விட பெற தவறிவிட்டது என கூறலாம். இவ்வளவுக்கும் கர்நாடகாவில் பருவமழை நன்றாக பெய்து அணைகளில் தண்ணீர் நிறைந்துள்ளது. 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படாததால் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும். ஏக்கருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். எப்போதெல்லாம் 12ம் தேதி தண்ணீர் திறக்கவில்லையோ அப்போதெல்லாம் வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிட வேண்டும். இனி சம்பா சாகுபடியையாவது பாதுகாக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி வருகிற 16ம் தேதி தஞ்சையில் பொதுப்பணித்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். 75 சதவீதம் சாகுபடி நடக்காத கிராமங்களில் முழுதாக காப்பீடு தொகை வழங்கவேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை. அதன் தலைவர் ஹல்தர் கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார். அவரை அந்தப் பதிவில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கர்நாடக அரசு அணைகள் மட்டுமல்லாமல் 100க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீர் நிரப்பிவருகிறது. தமிழக அரசு அறிவித்த குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் ஆழ்துளை பாசன விவசாயிகளுக்கு மட்டுமே உதவிகரமாக இருக்கும். மாறாக ஆற்றுநீரை பயன்படுத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படுவது போல் உரம் உள்ளிட்ட இடுபொருட்களையும் சேர்த்து வழங்க வேண்டும். தமிழகத்தின் வழங்க வேண்டும் மேற்கண் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சை பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு வரும் 16ம் தேதி முற்றுகை நடத்தப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

போட்டியளித்தபோது மணிமொழியன், சுந்தரவிமலநாதன், செந்தில்வேலன், சிமியோன் சேவியர்ராஜ், ரமேஷ், கலைச்செல்வன், கார்த்திகேயன், சாமி கரிகாலன், வைகறை, பழ. ராஜேந்திரன், சுந்தரவடிவேல், செம்மலர், ராஜசேகர், திருஞானம், தென்னவன், விடுதலை சுடர், புண்ணியமூர்த்தி, கூத்துவன், இலக்குவன், ராமசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்