காவல் நிலையத்தில் தந்தை, மகன் அடித்து கொலை சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், காவலர் ஜாமீன் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட விவகாரத்தில் காவலர்கள் ரகு கணேஷ், ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் (ஜெயராஜ், பென்னிக்ஸ்) ஆகியோரை போலீசார் கைது செய்து தாக்கியதில் ஏற்பட்ட சாவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இது சம்பந்தப்பட்ட பிரதான வழக்கு, மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காவலர் ரகு கணேஷ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த 2 மனுக்களும் நீதிபதிகள் வினீத் சரண், தினேஷ் மகேஸ்வரி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்தார் தரப்பு வழக்கறிஞர்கள், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவோ, அல்லது அதில் மாற்றங்களை செய்யவோ நாங்கள் விரும்பவில்லை. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுக்கிறது,’ என தெரிவித்தனர். மேலும், அது தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்….

Related posts

பங்குச்சந்தைகள் சரிவு

விலை குறைபவை எகிறுபவை எவை? பட்ஜெட்டில் சுங்க வரி அறிவிப்புகள் மூலம் இனிமேல் விலை குறையக்கூடிய மற்றும் விலை அதிகரிக்கக் கூடிய பொருட்கள்:

ஒன்றிய நிதிநிலை அறிக்கை ஒரு ஏமாற்றம்: மாயாவதி