காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் போலீசால் மக்களுக்கு அதிக துன்பங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை

புதுடெல்லி: ‘போலீசாரால் பொதுமக்களுக்கு ஏற்படும் துன்பங்கள் இந்தியாவில் தொடர்வது வருத்தமளிக்கிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் மூலம் பொதுமக்களின் சட்ட உதவிகளுக்கான மொபைல் செயலி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா பங்கேற்று பேசியதாவது: சமூகத்தை சட்டம் ஆள்கிறது. இதில், வசதி படைத்தவர்களுக்கு கிடைக்கும் நீதி, எளியவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த இடைவெளி நிரப்பப்பட வேண்டும். நீதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பது ஒரு முடிவற்ற முயற்சியாக இருக்க வேண்டும்.   நாட்டு மக்களுக்காக நாம் இருக்கிறோம் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். ஏனெனில், எளிய மக்கள் நீதி அமைப்புக்கு வெளியில் இருக்கிறார்கள். இந்த மொபைல் செயலி ஏழைகளுக்கும், சட்ட உதவி தேவைப்படுகிறவர்களுக்கும் ஆதரவாக இருக்கும். காவல் நிலையங்களில் மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதும், மற்ற பிற துயரங்களை போலீசாரால் பொதுமக்கள் அனுபவிப்பதும் தொடர் பிரச்னையாக இருந்து வருகிறது. இது குறித்து நாடு முழுவதும் போலீசாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்….

Related posts

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்

பல பெண்களுடன் உல்லாசம்; 4 மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை செய்த பிரஜ்வல்: எஸ்ஐடி விசாரணையில் பரபரப்பு தகவல்

கியூட் தேர்வு முடிவு தாமதம்: என்டிஏ மீது காங். சாடல்