காவல் துறை சார்பில் அமைக்கப்பட்டது பழுதடைந்த 12 சிசிடிவி கேமராக்கள் சீரமைப்பு-ஏலகிரிமலை மக்கள் மகிழ்ச்சி

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலை பகுதியில் காவல் துறை சார்பில் அமைக்கப்பட்டு பழுதடைந்திருந்த சிசிடிவி கேமராக்களை தினகரன் செய்தி எதிரொலியாக அதிகாரிகள் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது. இதனால் இங்கு நாள்தோறும் ெவளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். மேலும் இங்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்ற நிலையில் இங்குள்ள மக்களின் பாதுகாப்பு வசதிக்காக காவல் நிலையம் அமைக்கப்பட்டு ஜோலார்பேட்டை சர்க்கிள் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இங்கு நாளுக்கு நாள் பொதுமக்களின் வருகை அதிகரிப்பதாலும் வெளியில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காகவும் கடந்த ஆண்டு அத்தனாவூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து கொட்டையூர் வரை 12 இடங்களில் காவல்துறை சார்பில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. இந்த கேமரா மூலம் மேலிருந்து கீழே செல்லும் வாகனங்களும் கீழிருந்து மேலே வரும் வாகனங்கள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வந்தது. இதனால் அங்குள்ள போலீசாரும் சிரமமின்றி பணியாற்றி வந்தனர். மேலும், குற்ற சம்பவங்கள் நடைபெறுவது தடுக்கப்பட்டது. இந்நிலையில், சிசிடிவி கேமராக்கள் கடந்த சில மாதங்களாக அனைத்தும் பழுதடைந்தது. இதனை போலீசார் சீரமைக்காமல் இருந்தனர். இதனால், ஏலகிரி மலை சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பும், இங்குள்ள பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியானது. எனவே, பழுதடைந்துள்ள சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கடந்த மாதம் 8ம் தேதி தினகரனில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக எஸ்பி விஜயகுமார் உத்தரவின்பேரில் ஏலகிரி மலையில் அமைக்கப்பட்டு பழுதடைந்திருந்த சிசிடிவி கேமராக்களை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சீரமைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில், அனைத்து கேமராக்களும் தற்போது சீரமைக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்டது.மேலும் இங்குள்ள காவல் நிலையத்தில் கூடுதலாக 6 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்து கேமராக்களையும் போலீசார் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஏலகிரி மலைவாழ் மக்கள், சுற்றுலா பயணிகள் ெபரும் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், செய்தி வெளியிட்ட தினகரனுக்கு நன்றி ெதரிவித்தனர். …

Related posts

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1,000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது!

சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்டது தொடர்பாக டிஐஜி மீது வழக்கு பதிவு செய்த சிபிசிஐடிக்கு ஐகோர்ட் பாராட்டு!!

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவு!!