காவலர் தேர்வு மையத்தில் பசியால் மயங்கிய மூதாட்டிக்கு உணவு உதவிக்கரம் நீட்டிய போலீசார்

 

மதுரை, டிச. 11: காவலர் தேர்வெழுத வந்த பேத்திக்காக, மையத்தின் வெளியே காத்திருந்த மூதாட்டி பசியாமல் மயங்கினார். அங்கிருந்த போலீசார் அவருக்கு உணவு வழங்கி ஓய்வெடுக்க வைத்தது, அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று மதுரையில் 13 மையங்களில் நடந்து. திருப்பாலை யாதவா பெண்கள் கல்லூரியில் ஏராளமான பெண்கள் தேர்வெழுதினர். இதில் பங்கேற்க, கடச்சனேந்தலைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது பாட்டியுடன் அதிகாலையிலேயே வந்தார். பேத்தி தேர்வு எழுத சென்ற நிலையில் வெளியில் காத்திருந்த பாட்டி, காலை உணவு சாப்பிடவில்லை என தெரிகிறது. இதனால் லேசான மயக்கம் அடைந்தார்.

இதையடுத்து தேர்வு மையத்தின் வெளியே பாதுகாப்பு பணியில் இருந்த திருப்பாலை ஆய்வாளர் எஸ்தர் மற்றும் சக பெண் காலவர்கள் மூதாட்டியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, நடந்த சம்பவங்கள் தெரியவந்தது.. இதையடுத்து பெண் போலீசார், அவர்கள் சாப்பிட வைத்திருந்த உணவை மூதாட்டிக்கு கொடுத்தனர். பின், அவரை தேர்வு மையத்தில் உள்ள அறைக்கு அழைத்து சென்று, ஓய்வெடுக்கும்படி கூறினர். இது, காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது