காளையார்கோவில் யூனியன் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் மோதல்: சேர்களை தூக்கி எறிந்ததால் பரபரப்பு

காளையார்கோவில்:  சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைவர் (அதிமுக) ராஜேஸ்வரி தலைமை வகித்தார். கூட்டத்தில் 13-வது வார்டு கவுன்சிலர் மகேஸ்வரன் (அதிமுக), ‘‘கவுன்சிலர்கள் கோரிக்கைகளை ஏன் மதிப்பதில்லை, கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஒன்றிய தலைவரும், மற்ற சிலர் மட்டும் பேசிக் கொண்டு பணிகளை செயல்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்? எங்களுக்கு தெரியாமல் பணிகள் நடத்துவது ஏன்’’ என கேள்வி கேட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 12-வது வார்டு கவுன்சிலர் மனோகரன் (அதிமுக), மகேஸ்வரனோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு முற்றி ஒருவரை ஒருவர்தாக்கிகொண்டு , சேர்களை தூக்கி எறிந்தனர்.இதனால் உறுப்பினர்கள் இருவரையும் விலக்கி விட்டனர். தொடர்ந்து முறைகேடு குறித்து கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை எனக்கூறி கவுன்சிலர் மகேஸ்வரன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தால் கூட்டத்தில் பரபரப்பு காணப்பட்டது….

Related posts

பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!!

உ.பி. ஹத்ராஸ் சம்பவம்: பாஜக அரசின் காவல்துறையின் அலட்சியப்போக்கே காரணம்: செல்வப்பெருந்தகை

சொல்லிட்டாங்க…