காளையார்கோவிலில் சுற்றுச்சூழல் தின விழா

காளையார்கோவில், ஜூன் 11: தமிழ்நாடு அறிவியல் இயக்க காளையார்கோவில் கிளை மற்றும் நீரின்றி அமையாது உலகு அமைப்பு இணைந்து காளையார்கோவில் கஸ்தூரிபாய் தெருவில் உள்ள பூங்காவில் உலக சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். நீரின்றி அமையாது உலகு அமைப்பின் பொறுப்பாளர் கனல் முனீஸ் முன்னிலை வகித்தார். காளையார்கோவில் கிளை இணைச் செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 2023 ம் ஆண்டிற்கான கருப்பொருள் \\”பிளாஸ்டிக் கழிவுகளை வெல்லுங்கள்\\” என்பதாகும். சுற்றுச்சூழல், வனவிலங்குகள் மற்றும் மனித ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு பெரிய சுற்றுச்சூழல் பிரச்னை பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மக்குவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகலாம். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலெக்ஸாண்டர் துரை நன்றி கூறினார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்