காளையார்கோவிலில் இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம்

காளையார்கோவில். நவ.29: சிவகங்கை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் நேற்று அரசு மேல்நிலைப் பள்ளி காளையார் கோவிலில் நடைபெற்றது. முகாமை காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார். காளையார்கோவில் வட்டார கல்வி அலுவலர்கள் முகாமை தொடங்கி வைத்தனர்.

முகாமில் மனநல மருத்துவர்,குழந்தை நல மருத்துவர், உடல் இயக்க மருத்துவர், நரம்பியல் மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், மருத்துவ காப்பீட்டு பதிவு, புதிய அடையாள அட்டை பதிவு, ரயில்வே மற்றும் பேருந்து பயணச் சான்றிதழ், உதவி உபகரணங்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் கலந்து கொண்டார். வட்டார வள மைய மேற்பார்வையாளர்(பொ) சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தனர்.

Related posts

18 தீர்மானங்கள் நிறைவேற்றம் ஒன்றிய அரசுக்கு எதிராக கட்டுமான கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

திருவெறும்பூர் அருகே தலைவெட்டி அய்யனார் கோயில் ஆடி திருவிழா

உப்பிலியபுரம் அருகே விற்பனையாளரை தாக்கி ரேஷன் கடை சூறை