காளியம்மன் கோயிலில் நவராத்திரி விழா

 

சிவகங்கை, அக்.23: சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளியம்மன் திருக்கோவில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்றது. முன்னதாக மூலவர் அம்மனுக்கு வண்ண மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரமும் அதனை தொடர்ந்து அம்மனுக்கு பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன.

பின்னர் உற்சவர் அம்மனை சர்வ அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருள செய்து திரு உலா அலங்காரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு கோடி தீபம், கும்ப தீபம், நாகதீபம், சிம்ம தீபம், ரிஷப தீபம் உள்ளிட்ட பல்வேறு தீபாராதனைகள், சோடச உபச்சாரங்கள் செய்து மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கொலு பொம்மை தெய்வங்களுக்கும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காளியம்மனை வழிபட்டனர்.

Related posts

தெற்கு வெங்காநல்லூரில் மகளிர் சுகாதார வளாகம் திறப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை ரேஷனில் தட்டுப்பாடின்றி பொருட்கள் வழங்க வேண்டும்

ராஜபாளையம் அருகே நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பைகள்