காளப்பநாயக்கன்பட்டி ரூராட்சி மன்ற கூட்டம்

சேந்தமங்கலம், செப்.1: பருவமழை தொடங்க உள்ளதால், பேரூராட்சி பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால்களை பராமரிக்க வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ந்தமங்கலம் ஒன்றியம், காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி மன்ற கூட்டம், தலைவர் பாப்பு தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கவிதா அசோக்குமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ரமேஷ் தீர்மானங்களை படித்தார். பருவமழை பெய்ய தொடங்கி உள்ளதால், கழிவுநீர் வாய்க்கால்களில் தண்ணீர் தேங்காமல், தூய்மை பணியாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

15 வார்டு பகுதிகளிலும் அன்றாடும் சேரும் மக்கும், மக்காத குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், பேரூராட்சி பகுதியில் உள்ள நாடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்குவதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்தல், பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை