கால்வாயில் ஏற்பட்டுள்ள பள்ளம் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

 

பரமக்குடி, ஜூலை 31: பரமக்குடி அருகே பரளையாற்றில் இருந்து பிரிந்து செல்லும் கால்வாயில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வீணாகி வரும் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த உடனடியாக கால்வாயை சரி செய்ய வேண்டும் என வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி வட்டம் கொத்தங்குளம் குரூப் கீழ சிவன்குளம் மேலசிவன் குளம் ஆகிய கிராமங்களுக்கு பரளையாற்றில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையால் சுமார் 300 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த கிராமங்களுக்கு பாசன வசதி பெறுவதற்காக பாசன கால்வாய் கட்டப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால் கால்வாயில் அடியில் மிகப்பெரிய பள்ளம் விழுந்து. பரளை ஆற்றின் வழியாக தண்ணீர் வீணாக சென்று வருகிறது. விவசாயிகள் பரமக்குடி பொதுப்பணி துறை நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. வரும் மாதங்களில் பருவ மழை காலம் தொடங்குவதற்கு முன்பு கால்வாயில் ஏற்பட்டுள்ள பள்ளம் மற்றும் விரிசல்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை