கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்ற ஆர்டிஓ நேரில் ஆய்வு

பாலக்கோடு, ஆக. 19: பாலக்கோடு ஒன்றியம், எர்ரணஅள்ளி ஊராட்சியில் மழை காலங்களில் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீரானது போக்குவரத்து பணிமனை மற்றும் நெடுஞ்சாலை பகுதியில் குளம்போல் தேங்குவதால், போக்குவரத்து பணிமனை மற்றும் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இதையடுத்து ஆர்டிஓ கீதாராணி, நேற்று அப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். புங்கன்குட்டை, மன்னார்குட்டை ஆகிய ஏரிகளில் இருந்து மழைக்காலங்களில் வெளியேறும் உபரி நீரானது தளவாய்அள்ளி புதூர், கக்கன்ஜிபுரம், ரெட்டியூர், மூங்கப்பட்டி ரயில்வே தரைப்பாலம் வழியாக போக்குவரத்து பணிமனை மற்றும் நெடுஞ்சாலைகளில் குளம்போல் தேங்குவதுடன், பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தி வருவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, புங்கன் குட்டை முதல் தாமரை ஏரி வரை உள்ள கால்வாயில் உள்ள ஆக்கிமிப்புகளை அகற்றி, தாமரை ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது, பேரூராட்சி தலைவர் முரளி, செயல் அலுவலர் டார்த்தி, தாசில்தார் ராஜா, நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் சுப்ரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை