கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு செப். 26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..!!

சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு செப்டம்பர் 26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவ படிப்பு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 26ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். கால்நடை மருத்துவம், பராமரிப்பு பட்டப்படிப்பில் 580 இடங்களும், தொழில்நுட்ப பட்டப்படிப்பில் 100 இடங்களும் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம் போக எஞ்சிய இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். கடந்த ஆண்டை போலவே அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. …

Related posts

மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு

புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறை எதிர்த்து வழக்கு

ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது