கால்நடை நோய் புலனாய்வு பிரிவு சார்பில் பறவை காய்ச்சல், கன்று வீச்சு நோய் தடுப்பு முறை பயிற்சி

 

திருவள்ளூர்: கால்நடை நோய் புலனாய்வு பிரிவு சார்பில், அஸ்காட் திட்டத்தின் கீழ் கால்நடை உதவி ஆய்வாளர்களுக்கு பறவை காய்ச்சல், கன்று வீச்சு நோய்க்கான தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி நடந்தது. திருவள்ளூரில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் அலுவலக உள்ளது. இங்குள்ள, வளாகத்தில் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு சார்பாக, அஸ்காட் திட்டத்தின் கீழ் கால்நடை உதவி ஆய்வாளர்களுக்கு பறவை காய்ச்சல் மற்றும் கன்று வீச்சு நோய்க்கான முன்னேற்பாடு மற்றும் தடுப்பு முறைகள் குறித்து ஒரு நாள் பயிற்சியும் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாமும் நடத்தப்பட்டது.

இந்த பயிற்சி முகாமிற்கு மாவட்ட மண்டல இணை இயக்குநர் செய்த்தூன் தலைமை தாங்கினார். கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் பாஸ்கர் வரவேற்புரை ஆற்றினார். திருத்தணி கோட்ட உதவி இயக்குநர் தாமோதரன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் உதவி கலெக்டர் (பயிற்சி) கேத்ரின் சரண்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளக்க உரையாற்றினார். உதவி இயக்குநர்கள் அம்பத்தூர் சிவஞானம், பொன்னேரி செந்தில்நாதன், கால்நடை உதவி மருத்துவர்கள் நதியா, பிரேம் சீனிவாசன், திலகவதி மற்றும் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு குழுவினர் கலந்து கொண்டனர். இதில் திருவள்ளூர் மாவட்ட அனைத்து கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இறுதியில், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி மருத்துவர் செல்வபிரியா நன்றி கூறினார்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை