கால்நடைக்கான தீவனம் கரூர் சுற்றுவட்டார பகுதியில் சோளப்பயிர் அறுவடை தீவிரம்

கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுற்றுவட்டார பகுதியில் செல்லாண்டிபாளையம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் கால்நடைகளுக்கு பயன்படும் தீவனத்துக்காக பயிரிடப்பட்டிருந்த சோளப்பயிரை விவசாயிகள் ஆர்வத்துடன் அறுவடை செய்தனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட புறநகர்ப்பகுதிகளில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் அதிகளவு கால்நடைகள் வளர்க்கப்படுகிறது. மேலும், அரசு சார்பில் பெறப்பட்ட கால்நடைகளையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், கால்நடைகளின் தேவைக்காக அவ்வப்போது, கரூர் மாநகர பகுதிகளில் சோளப் பயிர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களும் தங்களுக்கு தேவையான அளவு சோளப்பயிர் கட்டுக்களை வாங்கிச் செல்கின்றனர். அதனடிப்படையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் அந்த பகுதி விவசாயிகள் சார்பில் சோளப்பயிர் பயிரிடப்பட்டிருந்தது. தற்போது அந்த பயிர்கள் முழுமையாக வளர்ந்த நிலையில், அதனை விவசாயிகள் ஆர்வத்துடன் அறுவடை செய்து வருகின்றனர். இதே போல், பல்வேறு பகுதிகளிலும் கால்நடைகளுக்கு என சோளப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்