கால்நடைகளை பிடிக்க வரும் 8ம் தேதி டெண்டர்

திருச்சி, நவ.2: திருச்சி மாநகர பகுதிகளிலுள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிப்பதற்கு வரும்.8ம் தேதி டெண்டர் விடப்பட உள்ளது என மேயர் அன்பழகன் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்துக்கு இடையூறாக குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிகின்றன. கேட்பாரற்று திரியும் ஆடு மாடுகளால் பல்வேறு சாலைகளில் தினமும் விபத்துகளும் நடந்து வருகிறது. இந்நிலையில், சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு கோணக்கரை பட்டியில் அடைத்து பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

இங்கு பராமரிக்கப்படும் கால்நடைகளை, அதன் உரிமையாளர்கள் 7 நாட்களுக்குள் உரிய அபராதம் செலுத்தி மீட்க வேண்டும். இல்லாவிட்டால் அவை பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாநகராட்சியால் ஊழியர்களால் பிடிக்கப்பட்டு, உரிமையாளர்களால் மீட்கப்படாத மாடுகள், கால்நடைகள் கடந்த வருடம் நவ.19 முதல் இந்தாண்டு அக்.30 வரை 248 கால்நடைகள் பொது ஏலம் மற்றும் அபராதம் தொகையாக ₹8,18,500 வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கால்நடைகளை சாலைகளில் விட்டால் மாநகராட்சி மூலம் அதனை பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும், என இதற்கான மாடுகள் பிடிப்பதற்கு வரும் 8ம் தேதி டெண்டர் விடப்பட உள்ளது என மேயர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி