கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க செயல் விளக்கம்

 

சேத்தியாத்தோப்பு, ஆக. 13: கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் வட்டாரத்தில் உள்ள வாழக்கொல்லை கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு குடல் புழு நீக்கம் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. கடலூர் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா, வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) கென்னடி ஜெபக்குமார் ஆகியோர் ஆய்வு செய்து குடற்புழு நீக்க மருந்துகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

வெய்யலூர் கால்நடை மருந்துவமனை உதவி கால்நடை மருத்துவர் சுவாமிநாதன் கால்நடைகளை பராமரிப்பது தொடர்பாகவும், கால்நடைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய ஊட்டச்சத்துக்கள் குறித்தும், குடற்புழு நீக்கம் செயல் விளக்கத்தினை அனைத்து விவசாயிகளுக்கு செய்து காண்பித்தார். கீரப்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அமிர்தராஜ், வேளாண்மை அலுவலர் சிவப்பிரியன், துணை வேளாண்மை அலுவலர் ராயப்பநாதன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர். நிகழ்ச்சியை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆனந்த செல்வி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சரவணன், அபிநயா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி