காலி பணியிடங்களை நிரப்பிடக்கோரி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

திருவாரூர், பிப். 14: காலி பணியிடங்களை நிரப்பிடக்கோரி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக இருந்து வரும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும், சான்றிதழ் வழங்கும் பணிக்காக புதிதாக துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்திட வேண்டும், வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் மகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தினை மாநில பொருளாளர் சோமசுந்தரம் துவக்கி வைத்து பேசினார்.

இதில் மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட தலைவர் செங்குட்டுவன், சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் லதா, கூட்டுறவு ஊழியர் சங்க மாநில செயலாளர் விஜயன் மற்றும் பொறுப்பாளர்கள் அசோக், கருணாமூர்த்தி, சரவணக்குமார், இளமாறன், ராமகிருஷ்ணன், ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்ட நிலையில் இந்த உண்ணாவிரத போராட்டத்தை மாநில செயலாளர் பார்த்திபன் மாலையில் முடித்து வைத்து பேசினார். முடிவில் மாவட்ட பொருளாளர் ரவி நன்றி கூறினார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை