காலியிடங்களை நிரப்ப மாநில பேரவையில் கோரிக்கை

 

விருதுநகர், ஜூலை 29: காலியாக உள்ள 9 ஆயிரம் சாலை பணியாளர்கள் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என மாநில பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விருதுநகரில் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்க 2 நாள் மாநில பேரவை மாநில தலைவர் வெங்கிடு தலைமையில் நேற்று முன்தினம் துவங்கி நேற்று நிறைவடைந்தது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி பேரவையை துவக்கி வைத்தார்.

மாநில பேரவையில், சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி ஓய்வுக்கு பின்பு ஓய்வூதிய பலன்களுக்கும் பணி கொடைக்கும் பொருந்தக்கூடிய வகையில் அரசாணை வெளியிட வேண்டும். 41 மாத காலத்தில் உயிரிழந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு சாலை பணியாளர் பணி வழங்க வேண்டும். காலியாக உள்ள 9 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

ஊதியத்தில் 10 சத ஆபத்து படி வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்டரை வழங்க வேண்டும். சிகிச்சைக்கு முன் பணம் கோரும் திட்டத்தை கைவிட்டு கட்டணமில்லா சிகிச்சை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறின. நேற்று மாநில பேரவையில் காலியாக உள்ள நிர்வாக பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் லெட்சுமி நாராயணன் நிறைவுரையாற்றினார்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து