காலிபிளவர் வரத்து அதிகரிப்பு

சேலம்: ஓசூரிலிருந்து சேலம் மார்க்கெட்டுக்கு காலிபிளவர் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு காலிபிளவர் பூ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, ஊட்டி, கொடைக்கானல், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களிலும், பெங்களூருவிலும் காலிபிளவர் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில், சாதகமான சூழ்நிலை நிலவுவதால் அமோகமாக விளைந்துள்ளது. விவசாயிகள் அறுவடை செய்து, பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர். ஓசூர், பெங்களூருவில் இருந்து கடந்த சில நாட்களாக சேலம் மார்க்கெட்டுக்கு காலிபிளவர் வரத்து அதிகரித்துள்ளது. சேலத்தில் ஆனந்தா காய்கறி மார்க்கெட், கடைவீதி, சின்ன கடைவீதி, பால்மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் தள்ளுவண்டியில் வைத்து, ஒரு பூ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்