காலாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு; மாணவர்கள் உற்சாகம்

சென்னை: காலாண்டு விடுமுறைக்கு பிறகு நடுநிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. 1 முதல் 5ம் வகுப்புகளுக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி நடப்பதை அடுத்து அந்த வகுப்புகள் 13ம் தேதி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மாதம் 15ம் தேதிக்கு பிறகு கீழ் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் நடந்தன. 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வுகள் 23ம் தேதி முதல் நடந்தன. இதையடுத்து கீழ் வகுப்புகளுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு  பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு 10ம் தேதி முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி நடத்தப்படுவதால், அந்த ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. மேலும் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அனுமதி கேட்டதின் பேரில் அந்த வகுப்புகள் காலாண்டு விடுமுறையில் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதனால், 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 9ம் வகுப்பு உள்ள உயர்நிலைப் பள்ளிகளில்  படிக்கும் மாணவ, மாணவியர் காலாண்டு விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிக்கு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல்  திறக்கப்பட்டு 6 முதல் 8ம் வகுப்புகளும், 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளும் இன்று  வழக்கம் போல தொடங்கின. மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.  ஏற்கெனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி, காலை 9 மணிக்கு இறை வணக்கத்துடன் பள்ளிகள் தொடங்கின.  அதேபோல தனியார் பள்ளிகளிலும் இன்று முதல் அனைத்து வகுப்புகளும் தொடங்கின. இதனால் காலையில் இருந்தே நகர்ப்புறங்களில் அதிக அளவில் நெரிசல் காணப்பட்டது.  தற்போது வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல், பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளுதல், பழுதடைந்த கட்டிடங்கள், தண்ணீர் தேங்கும் பகுதிகள், தரைக்கிணறு, தொட்டிகள் உள்ளிட்ட பாதுகாப்பற்ற முறையில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் பள்ளி வளாகங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் மழைக்காலங்களில் மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு வர  முடியும்….

Related posts

அடையாள அட்டையை ஷூவால் மிதித்து அட்டகாசம் இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்ட 5 கல்லூரி மாணவர்கள் கைது: ஆயிரம்விளக்கு போலீஸ் நடவடிக்கை

தி.நகர், வியாசர்பாடி கோட்டங்களில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: வாரியம் தகவல்

ஒரு கிலோ நகை திருடியதாக கூறி அறையில் பூட்டி சரமாரி தாக்கியதால் நகை பட்டறை ஊழியர் தற்கொலை:  உரிமையாளர் உள்பட 4 பேர் கைது  சவுகார்பேட்டையில் பரபரப்பு