காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு

தர்மபுரி, ஜூன் 12: தேய்பிறை அஷ்டமி பெருவிழாவையொட்டி, நேற்று அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, காலை 6 மணிக்கு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. காலை 11 மணி முதல் காலபைரவர் ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6 மணிக்கு ருத்ர அபிஷேகம், சிறப்பு யாகங்கள் நடந்தன.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நேற்றுடன் முடிவதால், காலபைவரர் கோயிலுக்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பூசணி விளக்கேற்றி காலபைரவரை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்திருந்தது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை