காலத்துக்கு ஏற்ற மாற்றம் மிக்.29 போர் விமானத்தின் தாக்குதல் திறன் அதிகரிப்பு

புதுடெல்லி: இந்திய விமானப்படையின் மிக்.29 கே போர் விமானத்தின் தாக்குதல் திறனை அதிகரிப்பதற்காக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்(எச்ஏஎல்) நிறுவன அதிகாரி கூறியதவாது: ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்ட மிக்- 29 கே ரக போர் விமானங்களில் ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்களை மட்டுமே பொருத்த முடியும். பெரிய அளவில் மாற்றங்களை செய்யாமல் ரஷ்யா அல்லாத வேறு நாடுகளின் ஆயுதங்களை பொருத்துவது மிக கடினம். இந்த சூழலில், இந்த விமானத்தில் மாற்றங்கள் செய்து நவீனமயமாக்க, இந்திய விமானப்படை நிர்வாகம் எச்ஏஎல் நிறுவனத்தை அணுகியது. மிக்-29 கே விமானத்துக்காக பிரத்யேகமாக இலக்குகளை குறி வைக்கும் கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனைகள் கடந்த ஜூன் மாதம் முதல் நடந்து வருகிறது. போரின் போது விமானியை வழிகாட்டி செல்வது இந்த கம்ப்யூட்டர்கள் தான். விமான கட்டுப்பாடு மற்றும் இலக்குகளை குறி வைத்து தாக்குதல் நடத்துவது போன்றவற்றில் இதன் பங்கு முக்கியமானது. மேலும், ஆஸ்ட்ரா  ஆயுதங்களையும் இணைக்கும் பணியும் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். தற்போதுள்ள காலத்துக்கு ஏற்றப்படி செய்யப்படும் இந்த நவீனமயத்தால், மிக்- 29 கே போர் விமானங்களின் தாக்குதல் திறன் மேலும் அதிகரிக்கும் என்று  எச்ஏஎல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆர்.மாதவன் தெரிவித்தார்….

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம்

ஹரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு