காற்று மாசுபாட்டை தடுக்க விழிப்புணர்வு சைக்கிளில் அலுவலகம் வந்த மதுரை கலெக்டர்

மதுரை: வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, ஹைட்ரோகார்பன் டை ஆக்சைடு மற்றும் நுண்துகள்கள் சுகாதாரத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கின்றன. இதன் மூலம் மாசுபடும் காற்றை சுவாசித்தால் தலைவலி, குமட்டல், கண் எரிச்சல், நுரையீரல் திறன் குறைதல், உடல் பாதுகாப்பு நலிவடைதல் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. காற்று மாசுபாடு சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. சுற்றுச்சூழல் சீர்கேட்டால் ஆண்டுதோறும் உலகளவில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் மரணமடைகின்றனர். தமிழகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், காற்று மாசினை கட்டுப்படுத்த பல்வேறு பசுமை முயற்சிகளை செய்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக வாரியத்தின் கடந்த வாரம் முதல் அனைத்து பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் புதன்கிழமை தோறும், பொது போக்குவரத்தை பயன்படுத்தி, அலுவலகம் வருகின்றனர்.இதை குறிப்பிட்டு மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள அறிக்கையில், ‘மதுரை மாவட்டத்தில், பணிபுரியும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் வாரம்தோறும் புதன்கிழமை தங்களது சொந்த வாகனங்களில் அலுவலகம் வருவதை தவிர்க்க வேண்டும். பொது போக்குவரத்து மூலம் அல்லது சைக்கிள் மூலம் அலுவலகத்திற்கு வரலாம். அலுவலகத்திற்கு அருகே வசிப்பவர்கள், அன்று ஒருநாள் நடந்து வரலாம். மேலும் தங்களது அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களும் கூட, இதனை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும். இது ஒரு சிறு படிக்கட்டு. ஆனால் சுற்றுச்சூழலை காக்கும் பயணத்தின் துவக்கம்’ என்று தெரிவித்துள்ளார்.இன்று புதன்கிழமை என்பதால், கலெக்டர் அனீஷ்சேகர் தனது வீடு உள்ள நத்தம் ரோட்டில் இருந்து, காலை 9.10 மணிக்கு சைக்கிளில் புறப்பட்டு, 30 நிமிடங்களில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தார். அவருடன், அவரது உதவியாளர்களும் தங்கள் சைக்கிள்களில் அலுவலகத்திற்கு வந்தனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்