காற்று சீசன் தொடங்கிய நிலையில் காற்றாலை மூலம் மின்உற்பத்தி அதிகரிப்பு

நெல்லை: காற்று சீசன் தொடங்கிய நிலையில் காற்றாலைகள் மூலம் சுமார் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்ககளில் அதிகளவில் காற்றாடிகள் நிறுவப்பட்டு, மின் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக ஆரல்வாய்மொழி, கணவாய் பகுதியில் இயங்கி வரும் காற்றாலைகள் மூலம் அதிகளவில் மின்சாரம் உற்பத்தி நடைபெறுகிறது. தற்போது காற்று சீசன் தொடங்கியுள்ளதால் காற்றாலைகள் மூலம் 2 நாட்களில், 4,164 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 1-ம் தேதி நிலவரப்படி, காற்றாலை மூலம் 2,097 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டியுள்ளதாகவும், தொடர்ந்து காற்றின் வேகத்தை பொறுத்து, மின் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும் காற்றாலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …

Related posts

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்த இந்து முன்னணிக்கு அனுமதி: ஐகோர்ட் உத்தரவு

ரயில் மோதி தந்தை, மகள் உடல் நசுங்கி பலி

லாட்ஜில் சிறுமிகளுடன் உல்லாசம் 17 வயது சிறுவன், வாலிபர் கைது: அறை ஒதுக்கிய மேலாளர் சிறையில் அடைப்பு