காற்றுமாசை தடுக்க தவறியதே பிரதமர் மோடி தான்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றசாட்டு

டெல்லி: டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையில் நீடித்துவரும் நிலையில் வடமாநிலங்களில் காற்று மாசை தடுக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். தலைநகர் டெல்லியில் காற்று மாசு என்பது தலையாய பிரச்சனைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. தீபாவளியன்று காற்று மாசு மிகவும் மோசமான நிலையை எட்டிய நிலையில், அது தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் வாகன பயன்பாட்டை குறைத்துக்கொள்ள மக்களுக்கு அறிவுறுத்தியுள்ள டெல்லி அரசு, வீடுகளிலிருந்தே பணிபுரியுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. காற்றுமாசால் நோய்தொற்று அதிகரிக்கும் அபாயம் எழுந்த நிலையில் பள்ளிகளை மீண்டும் மூட அச்சமும் நிலவுகிறது. இது குறித்து பேசிய தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே பஞ்சாப்பில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதை ஆளும் ஆம்ஆத்மி அரசு கட்டுப்படுத்த தவறியதால் டெல்லி மாசுபட்டு வருவதாக ஒன்றிய சுற்றுசூழல்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், காற்றுமாசு என்பது வடஇந்தியா முழுவதும் உள்ள பிரச்சனை என்று கூறியுள்ளார். டெல்லியும், பஞ்சாப்புமா நாடு முழுவதும் காற்றுமாசை பரப்பியது என ஆவேசமாக கேட்டுள்ள அவர், இதை தடுக்க தவறியதே பிரதமே மோடி தான் என குற்றம் சாட்டியுள்ளார். …

Related posts

ஆணவ குற்றங்களை தடுக்க சட்டம் இயற்றும்வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துங்கள்: திருமாவளவன் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை தொடர்பான விவகாரத்தில் கைது; கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சிபிஐ காவல்: டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி

ஜம்முவில் 6 மணி நேர பயங்கர சண்டை: 3 தீவிரவாதிகள் பலி