காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 12ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்ளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகப்பட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தப்பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 12 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.தேவலா 10 செ.மீ, மேல்பவானி 9 செ.மீ, சின்னக்கல்லார் 8 செ.மீ, நடுவட்டம், மேல்கூடலூர், கூடலூர் பஜாரில் தலா 6 செ.மீ, மங்களாபுரம், வால்பாறை தாலுகா அலுவலகம், சோலையாரில் தலா 5 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.இன்று குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்றும், நாளையும் ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்று முதல் 12ம் தேதி வரை கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு