கார் விபத்தில் தெலுங்கு நடிகை பலி

சென்னை: கார் விபத்தில் தெலுங்கு நடிகை பரிதாபமாக உயரிழந்தார். ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இன்ஸ்டாகிராம், மற்றும் ‘சல்சா ராயுடு’ என்ற யுடியூப் சேனல்மூலம் புகழ்பெற்றவர் காயத்ரி. அதன் மூலம் சினிமா நடிகையாகி பல படங்களில் நடித்து வந்தார். ‘மேடம் சார் மேடம் அந்தே’ என்ற வெப் தொடரிலும் நடித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தனது நண்பர்களுடன் இரவு விருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு காரில் வீடு திரும்பினார். காரை காயத்ரி ஓட்ட நண்பர்கள் உடன் அமர்ந்து வந்தனர். கார் கச்சிபவுலி பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில் காயத்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்கு வயது 26. காயமடைந்த அவரது நண்பர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்தின் போது சாலையில் நடந்து சென்ற 38 வயதுடைய பெண்ணும் காருக்கு அடியில் சிக்கி மரணம் அடைந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காயத்ரி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்….

Related posts

கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை