காரை மோதி விவசாயிகள் படுகொலை ஒன்றிய அமைச்சர் மகன் ஜாமீன் மனு நிராகரிப்பு

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் கடந்தாண்டு அக்டோபரில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதி 4 விவசாயிகள் பலியாகினர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிஷ் மிஸ்ரா, கடந்த பிப்ரவரி 10ம் தேதி லக்னோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜாமீனை ரத்து செய்தது. இதனால், ஆசிஷ் மீண்டும் கைதாகி சிறைக்கு சென்றார். இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு ஆசிஷ் வழக்கு தொடர்ந்தார். இதை நேற்று விசாரித்த நீதிபதி கிருஷ்ணா பாகல் தலைமையிலான அமர்வு, ‘ஆசிஷ்க்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால் சாட்சிகளை களைக்கக்கூடும். இதனால், விசாரணை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது,’ என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர்….

Related posts

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு