காரையாறு கோயிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு பாபநாசம் சோதனை சாவடியில் ஐயப்ப பக்தர்கள் சாலை மறியல்

வி.கே.புரம்: நெல்லை மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், நேற்று முன்தினம் மதியம் முதல் இரவு வரை மழை பெய்தது. இதனால் பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததையடுத்து அணைகளில் இருந்து 2500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதையடுத்து பக்தர்களின் பாதுகாப்பு கருதி நேற்று காலை முதல் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக பாபநாசம் வனச்சோதனை சாவடி மூடப்பட்டது. இந்நிலையில் மதுரையில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் 60 பேர், பாபநாசம் வனச்சோதனை சாவடியில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். காரையாறு கோயிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் ஐயப்ப பக்தர்கள் மறியலை கைவிட்டனர். …

Related posts

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி

சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி

அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்: நீதிபதி!